மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

மருத்துவமனையில் தீ விபத்து: 41 பேர் பலி!

மருத்துவமனையில் தீ விபத்து: 41 பேர் பலி!

தென்கொரியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (ஜனவரி 26) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியா நாட்டில் சியோல் நகரில் மிர்யாங் என்ற பகுதியில் செஜாங் மருத்துவமனை அமைந்துள்ளது. 6 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில் மருத்துவமனை மற்றும் ஒரு நர்சிங் ஹோம் இயங்கிவந்தது. இந்நிலையில் இன்று காலை இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் 2 செவிலியர்கள், அவசர கால சிகிச்சைப் பிரிவு அறை ஒன்றில் திடீரென தீ பற்றிக்கொண்டது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டபொழுது மருத்துவமனையில் 200 பேர் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளதாகவும், 11 பேரின் நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியிருப்பதாகவும், 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தினை அடுத்து அனைத்து நோயாளிகளும் மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோமிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் வெளியே வரும் வழியிலேயே இறந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 26 ஜன 2018