மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

உதயநிதியை வரவேற்கிறேன்!

உதயநிதியை வரவேற்கிறேன்!

உதயநிதி அரசியலுக்கு வந்தால் வாழ்த்துக்கள் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி, கமல் ஆகியோர் தங்களது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், விஷாலும் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அரசியல் குறித்துப் பேசியுள்ளார். சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உதயநிதி தன்னுடைய அரசியல் தேர்தலை நோக்கியது அல்ல, திமுக தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

புதுக்கோட்டையில் நேற்று (ஜனவரி 26) திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கனிமொழி, "இதில் நான் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. உதயநிதிக்கு ஆர்வம் இருந்தால், அவர் கட்சிப் பணியாற்ற வருவதில் தவறில்லை. வந்தால் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார். அவர் பேசி முடித்ததும் அங்கிருந்த திமுகவினர் சின்னத் தளபதி வாழ்க என்று கோஷமிட்டனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018