மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

தோனிக்குக் கிடைத்த கௌரவம்!

தோனிக்குக் கிடைத்த கௌரவம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நாட்டின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்னதாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2017ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் இந்தப் பத்ம விருதுகள் மத்திய அரசினால் அறிவிக்கப்படுகின்றன. சுமார் 80க்கும் மேற்பட்ட பத்ம விருதுகளில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டு தோனிக்கு பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் 2005ஆம் ஆண்டு முதல் சிறப்பான கேப்டனாகச் செயல்பட்டுவந்த தோனி 2007ஆம் ஆண்டு இந்திய அணி டி-20 உலகக் கோப்பையைக் கைப்பற்ற உதவினார். அதுமட்டுமின்றி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றையும் கைப்பற்றக் காரணமாகத் திகழ்ந்தார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 26 ஜன 2018