மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

5 விக்கெட்டுகள்: அசத்திய பூம்ரா

5 விக்கெட்டுகள்: அசத்திய பூம்ரா

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் முடிவில் இந்தியா தென்னாப்பிரிக்காவைவிட ஓரடி முன்னிலையில் இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் (ஜனவரி 24) தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவதற்குள் 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா நேற்று ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 25) முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தொடக்கத்தில் புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் திணறினார்கள். தொடக்க வீரர்கள் டீன் எல்கர் (4) மற்றும் ஐடின் மார்கம் (2) இருவரும் புவனேஸ்வர் பந்தில் பார்த்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். நேற்று மாலை குறைந்த ஓவர்கள் மீதமிருந்த நிலையில் பேட்ஸ்மேன்களுக்குப் பதிலாக களமிறங்கிய காகிசோ ரபாடா இன்று இந்தியப் பந்து வீச்சைத் தாக்குப்பிடித்து ஆடி 84 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவிலியர்ஸ் 5 ரன்கள் மட்டுமே சேர்த்து புவனேஸ்வரின் ஸ்விங் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். அதுவரை விக்கெட் வீழ்த்தாமல் இருந்த ஜஸ்ப்ரீத் பூம்ரா ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் (8), குவின்டன் டி காக் (8) இருவரது விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். அதன் பின்னர் ஹஷிம் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்த வெர்னன் ஃபிலாண்டர் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

அரை சதம் அடித்த ஆம்லா, பூம்ரா பந்தில் வெளியேறினார். முகம்மது ஷமி வீசிய பந்தில் ஃபிலாண்டர் (35) ஆட்டமிழந்தார். பூம்ரா கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் எளிதில் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் சேர்த்து 7 ரன்கள் மட்டும் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தொடக்க வீரர்களாக பார்த்திவ் படேல் மற்றும் முரளி விஜய் களமிறங்கினர். பார்த்திவ் படேல் முதல் ஓவர் முதலே பல்வேறு கேட்ச் வாய்ப்புகளை தென்னாப்பிரிக்கா அணிக்கு எளிதில் வழங்கினார். ஆனால், அவரது அதிர்ஷ்டம், அனைத்தையும் தென்னாப்பிரிக்க வீர்ரகள் தவறவிட்டனர். ஆனால், அதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை 16 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஃபிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் முரளி விஜய் உடன் ஜோடி சேர்ந்த ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டினை இழந்து 49 ரன்களைச் சேர்த்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 ஜன 2018