மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

மசாலா: இந்தியாவில் சர்வதேசக் கருத்தரங்கு!

மசாலா: இந்தியாவில் சர்வதேசக் கருத்தரங்கு!

மூன்றாவது சர்வதேச மசாலா பொருள் கருத்தரங்கு வரும் பிப்ரவரி 4 முதல் 7 வரை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த நான்கு நாள் கருத்தரங்கில் சர்வதேச மசாலா பொருள் சங்கங்கள், கொள்கை உருவாக்கம் செய்பவர்கள், விவசாயிகள் என மொத்தம் 750 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிவாவை மையமாகக் கொண்ட சர்வதேச வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குநர், அரஞ்சா கோன்சால்வெஸ் இக்கருத்தரங்கைத் தொடங்கி வைக்கிறார். இந்திய ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குநர் திரிலோசன் மஹோபத்ரா இதற்குத் தலைமை வகிப்பார். அனைத்திந்திய மசாலா பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் கொச்சின் வர்த்தக மையம் மற்றும் தொழில்துறை போன்ற அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

இக்கருத்தரங்கம் குறித்து அனைத்திந்திய மசாலா பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரகாஷ் நம்பூத்ரி பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “மாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் தொழில் துறையில் ஏற்படும் சிக்கல்களை நிர்வகிப்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். பயிர்களின் நிலைத்தன்மை, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், தொழில் துறையின் ஏற்றத்தாழ்வு, நிலையான விவசாயத்தை மேம்படுத்துதல், மசாலா பொருட்களின் தொழிற்துறை சவால்கள், உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான புதுமையான தொழில்நுட்பங்கள், பயனுள்ள உத்திகள் ஆகியவை கருத்தரங்கில் கலந்தாலோசிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 26 ஜன 2018