மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

தீக்குளித்த ஓட்டுநர் மணிகண்டன் மரணம்!

தீக்குளித்த  ஓட்டுநர் மணிகண்டன் மரணம்!

போக்குவரத்து போலீசார் தரக்குறைவாக பேசியதால் தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன்(21), சென்னை தாம்பரத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் ஓஎம்ஆர் சாலையில் பயணியை இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, மணிகண்டன் சீட்பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவரது காரை போக்குவரத்து போலீசார் மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி மணிகண்டனிடம் பணம் கேட்டுள்ளனர்..

தொடர்ந்து,அவரையும் அவரது குடும்பத்தாரையும் தரக்குறைவாகப் பேசி போலீசார் தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது செல்போன் மூலம் வாக்குமூலம் அளித்துவிட்டு தன் மீது பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்தார்

உடல் முழுவதும் எரிந்து,ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மணிகண்டனுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. தொடர்ந்து அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைசெல்வன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் ஆகாத இரண்டு சகோதரிகள், சகோதரன் என ஒட்டுமொத்த குடும்பமும் மணிகண்டனின் வருமானத்தை நம்பி தான் இருந்து, இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம். எனது மகனின் இறப்புக்கு நியாயம் வேண்டும் என்று அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 26 ஜன 2018