மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

அரசு பேருந்தில் சரத்குமார்

அரசு பேருந்தில் சரத்குமார்

கட்டண உயர்வினால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய சமக தலைவர் சரத்குமார் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார்.

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்திக் கடந்த 19ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. முன்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்டண உயர்வினால் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் நேற்று (ஜனவரி 26) அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து பயணிகளின் கருத்துக்களுடன் தனது முகநூல் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அவர், "பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு மக்களின் மன நிலையையும் அவர்களின் பொருளாதார பாதிப்பின் அளவையும் நேரிடையாக அறிந்து கொள்ளும் பொருட்டு இன்று சென்னை திருவான்மியூரிலிருந்து தி நகர் செல்லும் 47A பேருந்தில் பயணம் செய்தேன். பஸ்ஸில் பயணம் செய்த மக்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018