மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

இந்தி கற்கும் கேத்ரீனா

இந்தி கற்கும் கேத்ரீனா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது மனைவி ரோமி தேவ் கதாபாத்திரத்தில் நடிக்க கேத்ரினா கைஃப் ஒப்பந்தமாகியுள்ளார்.

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு முதன்முறையாக உலககோப்பையை கைப்பற்றியது. இதை நினைவுகூரும் வகையில் கபீர் கான் இயக்கும் கபில்தேவின் வாழ்க்கைவரலாற்று படத்திற்கு 1983 என பெயரிடப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் கபில் தேவாக நடிக்க கதாநாயகியாக கேத்ரினா ஒப்பந்தமாகியுள்ளார்.

“எனது இளமைக் காலத்தில் கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டு தான் எங்கும் நிறைந்திருந்தது. கிரிக்கெட்டுக்கு பின்னால் உள்ள கதைகளை கபீர் கான் கூறும் போது ஆச்சர்யமானதாக இருந்தது. இந்த படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது விளையாட்டு சம்மந்தமான கதை மட்டுமல்ல, ஒரு மனிதனின் வாழ்க்கை கதை” என்று ரன்வீர் சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்களுக்கு அளித்த பேட்டியில், “ரன்வீர் சிங்குடன் இணைந்து நடிப்பதால் கேத்ரினா இந்த படத்திற்கு ஆர்வம் காட்டினார். இயக்குநர் கபீர் கான் கேத்ரினாவுடன் நட்பு பாராட்டி வருபவர். கேத்ரினாவின் இந்தி உச்சரிப்பு குறித்து அவருக்கு சந்தேகம் இருந்தது. தனது இந்தி உச்சரிப்பு இவ்வளவு காலம் பெரிதான எந்த வருத்தத்தையும் அவருக்குள் ஏற்படுத்தவில்லை. தற்போது இந்த படத்திற்காக கபில் தேவின் மனைவி போல் சரியாக வசனம் உச்சரித்து நடிக்க முயன்று வருகிறார்” என்று கூறியுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018