மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

தண்டவாளம் அருகே செல்ஃபி எடுக்காதீர்கள்!

தண்டவாளம் அருகே செல்ஃபி எடுக்காதீர்கள்!

ரயில் தண்டவாளம் அருகே செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் பாரதிநகர் ரயில்வே ஸ்டேஷனில் சிவா என்ற மாணவர், ஓடும் ரயில் முன் செல்ஃபி வீடியோ எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அவர் மீது ரயில் மோதியது. அவர் எடுத்த ‘செல்ஃபி’ வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில் தண்டவாளம் அருகே செல்ஃபி எடுக்க முயன்றும், சாகசம் நிகழ்த்தியும் இளைஞர்கள் சிலர் விபத்தில் சிக்கிய சம்பவங்களை நான் செய்தியிலும், வீடியோவிலும் பார்த்தேன். இத்தகைய விபத்துகள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளன. இளைஞர்களே, நாட்டின் எதிர்காலம். ஆகவே, அவர்கள் தண்டவாளம் அருகே செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

இன்றைய நவீன உலகில் இளைஞர்கள், ஸ்மார்ட் போன்களில் செல்ஃபி எடுத்து அதைச் சமூக வலைதளங்களில் பகிருவதில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதில் ஒருசிலர் ஆபத்து என்று தெரிந்தும் (மலையின் உச்சிக்குச் சென்று எடுப்பது, மிருகங்களுக்கு அருகே சென்று எடுப்பது, பைக்கில் சாகசம் செய்து எடுப்பது, ஓடும் ரயில் முன் எடுப்பது) இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவருவது வருத்தத்திற்குரியது என்று பலரும் கூறிவருகிறார்கள்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 26 ஜன 2018