மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

இசைக்கு இன்னொரு மகுடம்!

இசைக்கு இன்னொரு மகுடம்!

‘இந்த விருதின் மூலமாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மக்களையும் தமிழ்நாட்டையும் கௌரவிப்பதாக நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று (ஜனவரி 25) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த படியாக நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளது. இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் திரையிசை உலகில் காலடி எடுத்து வைத்த இளையராஜா, தனது முதல் படத்தின் இசையிலேயே பலகோடி ரசிகர்களை இசை மழையில் லயிக்கச் செய்தார். அன்னக்கிளியில் தொடங்கிய அவரது இசைப்பயணம் 1,000 படங்களைக் கடந்தும் தேக்கமில்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. தனது 1,000ஆவது திரைப்படத்துக்கும் தேசிய விருது பெற்றார். இசை உலகின் உயரத்துக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டிய அவரை கௌரவிக்கும்விதமாக 2010ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தற்போது அவரது இசைக்கு மற்றும் ஒரு மகுடமாக பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இளையராஜா, “இந்த விருது வழங்கவிருப்பதை மத்திய செய்தித் தொடர்பு துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஸ்ரீ பிரகாஷ் தொடர்புகொண்டு கூறினார். இந்த விருதை நான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததும், இந்த விருது நீங்கள் ஏற்றுக்கொள்வதால் கௌரவிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

மேலும், “இந்த விருதின் மூலமாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் கௌரவிப்பதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு கமல், ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்

எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது.

விஜயகாந்த்

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தது மட்டுமல்லாமல் தமிழ் இசையையும், கிராமிய இசையையும் உலக அரங்குக்கு எடுத்துச் சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் இசைஞானி இளையராஜா.

பத்ம விபூஷண் விருது பெறும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று, விருதுகளுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இளையராஜாவைப் போல் கலைத்துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞரான விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ் நாட்டுப்புறக் கலைகளின் என்சைக்ளோபீடியா’ என்று விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் புகழப்பட்டுள்ளார். பாரம்பர்யமான தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலைகளை ஆவணப்படுத்துவதற்காகத் தனது வாழ்நாளைச் செலவிட்டதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 26 ஜன 2018