மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

இதுதான் ஆன்மிக அரசியலா?

இதுதான் ஆன்மிக அரசியலா?

‘தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் தியானம் என்று சொல்கிறார்களே... இதுதான் ஆன்மிக அரசியலா?’ என்று மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கடலூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 25) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் இருந்துள்ளார். அப்போது அவர் தியானத்தில் இருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா சமாதியில் ஒரு தியானம் பிறந்தது. பதவிக்காக ஒரு தியானம், பதவி போய்விட்டது என ஒரு தியானம், மீண்டும் பதவியைப் பெற ஒரு தியானம். ஒருவேளை, தியானம், தியானம் என்று சொல்கிறார்களே... இதுதான் ஆன்மிக அரசியலா என்ற சந்தேகமும் வந்துள்ளது. இந்த மண் தந்தை பெரியார், அண்ணா உருவாக்கிய மண். திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது என்பதற்கு எத்தனையோ வரலாறு உள்ளது. கழகம் இல்லாத தமிழகம் என்று எளிதாகக் கூறுகின்றனர். நீங்கள் ஒரு மேடை அமைத்துப் பேசக்கூடிய தெம்பை உருவாக்கித் தந்தது திராவிட மண்” என்று காட்டமாக விமர்சித்த அவர், “இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

“பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே மாணவர்களைத் திரட்டித் தமிழுக்காகப் போராடியவர் கருணாநிதி. 1938இல் இருந்து தமிழுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தியை எதிர்க்க வேண்டும் என்பது நமது கொள்ளையல்ல. ஆனால், ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்க வேண்டும். தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி, இந்தியைக் கட்டாய பாடமாக்க முயற்சி செய்தார். தமிழுக்காகப் பல களங்களைப் பார்த்துள்ளோம். இன்றைக்கு நீர்ப்பூத்த நெருப்பாகக் களம் இருந்துகொண்டே இருக்கிறது” என்று பேசிய ஸ்டாலின், “ஒரு பல்கலைக்கழகத்தின் மாணவருக்குச் சிலை உண்டு என்றால் அது மொழிக்காகப் போராடிய ராஜேந்திரனின் சிலை மட்டும்தான்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், “இருமொழி கொள்கை தொடர்பான தீர்மானம் தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. தற்போது மத்தியில் மதவெறி பிடித்த ஆட்சி உள்ளது. சதிவலை பின்னி எப்படியாவது தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறது. தமிழர்களுடைய கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் கடந்த ஆண்டு மெரினா புரட்சி என்ற மாபெரும் புரட்சி ஏற்பட்டது. தற்போது மீண்டும் அத்தகைய புரட்சி வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அடிபணிந்துள்ள குதிரைப்பேர அரசு திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 27ஆம் தேதி திமுக சார்பில் நடைபெறுவது ஆர்ப்பாட்டம் மட்டுமே. அதற்குத் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் 29ஆம் தேதி முதல் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடைபெறும். சிறையில் அடைத்தாலும் கவலை இல்லை.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 26 ஜன 2018