மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

மொழிபெயர்ப்பில் மைக்ரோசாஃப்ட்!

மொழிபெயர்ப்பில் மைக்ரோசாஃப்ட்!

இந்தியாவின் 69ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ், இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவையைத் தொடங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் நரம்பியல் வலையமைப்புகள் ஆகிய தொழில்நுட்பங்களைக்கொண்டு உருவாகியுள்ள இந்த மொழிபெயர்ப்பு சேவை மிகவும் துல்லியமானவை. இதன் ஒலி மிகவும் இயல்பானதாக இருக்கும். இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் மேலாளர் சுந்தர் ஸ்ரீநிவாசன் கூறுகையில், “மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளைக் கொண்டாடிவருகிறது. அத்துடன் பரந்த இணையத்தின் வாயிலாக இந்திய மொழிகளை இன்னும் எளிதாக அணுக முயற்சி செய்து வருகிறது. சுமார் இருபதாண்டுகளாக இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது, குரல் அடிப்படையிலான அணுகல் மற்றும் இயந்திரவியல் மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த இயந்திர கற்றல் (Machine Learning) தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவின் ஜனநாயக உரிமைகளில் ஒன்றான அனைவருக்கும் தகவல் கிடைக்க வழி வகுக்கிறது.

இணையதளப் பயன்பாட்டாளர்கள், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர், பிங்க் சர்ச், பிங்க் டிரான்ஸ்லேட்டர் வெப்சைட் மற்றும் மைக்ரோசாஃப்ட்டின் வோர்டு, எக்செல், பவர் பாய்ன்ட், அவுட்லுக், ஸ்கைப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும்போது இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இதன்மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயன்பாட்டாளர்கள், வாக்கியம், பேச்சு மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றிலிருந்து மொழிகளை அங்கீகரிக்கவும், மொழிபெயர்க்கவும் முடியும்” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 ஜன 2018