மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

தமிழகக் காவல் துறையினருக்குக் குடியரசு தலைவர் விருது!

தமிழகக் காவல் துறையினருக்குக் குடியரசு தலைவர் விருது!

ஐந்து பெண் காவல் துறை அதிகாரிகள் உட்பட 21 தமிழகக் காவல் துறை அதிகாரிகளுக்குக் குடியரசு தலைவர் விருது இன்று (ஜனவரி 26) வழங்கப்படவுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி சீர்மிகு, மெச்சத்தகுந்த பணிக்கான குடியரசுத் தலைவரின் விருது நாடு முழுவதும் சிறந்த முறையில் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகியுள்ளது.

வீர தீர செயல்புரிந்ததற்காக 107 பேர், காவல் துறைக்குப் பெருமை சேர்த்ததற்காக 75 பேர், மெச்சத்தகுந்த பணிக்காக 613 பேர் என மொத்தம் 795 காவல் துறை அதிகாரிகள் இந்த ஆண்டு விருது பெறவுள்ளனர்.

இதில் மெச்சத்தகுந்த பணிக்காக 21 தமிழகக் காவல் துறை அதிகாரிகளுக்கும் தகைசால் பணிக்காக 2 அதிகாரிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான விருது பெறுபவர்கள்

1) சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் மனோகரன்

2) காவலர் நலன் கூடுதல் டிஜிபி ராஜிவ் குமார்

மெச்சத்தகுந்த பணிக்கான குடியரசுத் தலைவர் விருது பெறுபவர்கள்

1) அ.ராதிகா, காவல் கண்காணிப்பாளர் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, மேற்கு சரகம், சென்னை.

2) ஆர்.லலிதா லட்சுமி, காவல் கண்காணிப்பாளர் - பொருளாதாரக் குற்றப்பிரிவு, சென்னை.

3) எஸ்.மல்லிகா, துணை காவல் ஆணையர் - மத்திய குற்றப்பிரிவு பெருநகர காவல், சென்னை.

4) பா.சாமுண்டீஸ்வரி, காவல் கண்காணிப்பாளர் - தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம், சென்னை.

5) ச.லட்சுமி, துணை காவல் ஆணையர் - சட்டம் மற்றும் ஒழுங்கு, கோயம்புத்தூர்.

6) எஸ்.இளங்கோ, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை. சிறப்புப் புலனாய்வு பிரிவு, சென்னை.

7) என்.மோகன்ராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - காவல் பயிற்சிப்பள்ளி, ஆவடி.

8) கே.ராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை தலைமையகம், சென்னை.

9) ஏ.பி.செல்வன், காவல் உதவி ஆணையாளர் – தி.நகர் சரகம், சென்னை.

10) ஏ.சுப்பராயன், காவல் உதவி ஆணையாளர் - தரமணி சரகம், சென்னை.

11) ஜி.ஹெக்டர் தர்மராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, நாகர்கோவில்.

12) எம்.ராமச்சந்திரமுர்த்தி, காவல் ஆய்வாளர் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை.

13) ஏ.அருளரசு ஜஸ்டின், காவல் ஆய்வாளர் - தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

14) ஏ.குமாரவேலு, காவல் ஆய்வாளர் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, சென்னை.

15) வி.பாஸ்கரன், காவல் ஆய்வாளர் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, சென்னை.

16) கே.மோகன்குமார், காவல் சார்பு ஆய்வாளர் - முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு, தலைமையகம், சென்னை.

17) எஸ்.வேணுகுமரன், காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் - காவல் கணினி பிரிவு, மாநில குற்ற ஆவண காப்பகம், சென்னை.

18) பி.செல்வராஜு, காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, கோயம்புத்தூர்.

19) கே.ரவி, காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் - நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு, நீலகிரி.

20) எஸ்.எம்.மதிவேந்தன், காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, சென்னை.

21) என்.வெங்கட சரவணன், தலைமை காவலர் - நீலாங்கரை காவல் நிலையம், சென்னை.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018