மன்னிப்பு கேட்ட சென்னை உயர் நீதிமன்றம்!


சுதந்திரப் போராட்ட தியாகியான காந்தியிடம் சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த காந்தி (89), சுதந்திரப் போராட்ட வீரர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தபோது வெள்ளையர் கைது செய்தனர். சுதந்திரப் போராட்ட வீரருக்கான ஓய்வூதியம் கோரி காந்தி விண்ணப்பித்து இருந்தார். இவரின் விண்ணப்பத்தைத் தமிழக அரசு பரிசீலிக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குச் சரியாக ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. எனக்கு 37 ஆண்டுகளாக ஓய்வூதியம் மறுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியிருந்தார்.