மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

முதல் பாதியில் மட்டும் முன்னிலை!

முதல் பாதியில் மட்டும் முன்னிலை!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 25) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி, நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது.

ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், இந்த வருடம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் சென்னை அணியும் மோதின. இதுவரை நடைபெற்றுள்ள மூன்று சீசனில் கொல்கத்தா அணி இரு முறையும், சென்னை அணி ஒரு முறையும் கோப்பையைக் கைப்பற்றி உள்ளன. எனவே, இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாகவே இருக்கும். அதன்படி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியிலும் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால், போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக சென்றது.

முதல் பாதி முடிவதற்கு முன்னர் 44ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் மார்டின் பீட்டர்சன் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் சென்னை வீரர் மில்சன் அல்வஸ் முதல் கோலினை அடித்துப் போட்டியை சமன் செய்தார். அதன் தொடர்ச்சியாகப் போட்டியின் 66ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜேஜே ஒரு கோல் அடித்து 2-1 என அணியை முன்னிலை பெற செய்தார்.

ஆனால், அதன் பின்னர் கிடைத்த எளிமையான வாய்ப்பை சென்னை வீரர்கள் தவறவிட்டனர். இருப்பினும் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018