மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

இசையமைப்பாளராகும் க்ரிஷ்

இசையமைப்பாளராகும் க்ரிஷ்

பின்னணிப் பாடகரான க்ரிஷ், நடிப்பைத் தொடர்ந்து இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

2006 ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் வெயில் மாலையிலே’ பாடலை ஹரிஹரனுடன் இணைந்து பாடி திரையுலகில் அறிமுகமானவர் பாடகர் க்ரிஷ். அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடிய க்ரிஷ், யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீகாந்த் தேவா, ஜோஷ்வா ஸ்ரீதர், டி.இமான், விஜய் ஆன்டணி, கார்த்திக் ராஜா, தமன், சுந்தர்.சி பாபு உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

இதையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு க்ரிஷ் நடிகை சங்கீதாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பாடல் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த க்ரிஷ், ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படத்தில் நடிகை சிருஷ்டி டான்கேவுடன் இணைந்து நடித்தார். மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க முயன்றுவந்த க்ரிஷ் தனக்குப் பொருத்தமான கதையை இயக்குநர்களிடத்தில் கேட்டுவந்தார். இதனிடையில் சிங்கம் 3 உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் பின்னணிப் பாடகராக, நடிகராக இருந்த க்ரிஷ், இந்த வருடம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறார். இந்தத் தகவலை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், எந்தெந்த படங்களுக்கு இசையமைக்கப் போகிறார் என்ற விவரத்தை அவர் அறிவிக்கவில்லை.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018