மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

உயர்மட்டக் குழு விசாரணை வேண்டும்!

உயர்மட்டக் குழு விசாரணை வேண்டும்!

நித்தியானந்தா ஆசிரமம் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விதித்துள்ளது.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்ததாக வைரமுத்துமீது இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் தங்களை நித்தியானந்தா ஆசிரமத்தின் சீடர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சிலர், வைரமுத்து, தமிழன் பிரசன்னா, கருப்பு கருணா உள்ளிட்டோரை தடித்த வார்த்தைகளால் தாக்கிப் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதற்கு எதிராக நித்தியானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்றும், நித்தியானந்தா ஆசிரமம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்று (ஜனவரி 25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு, “கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் சாமியார் என்கிற போர்வையில் செயல்படும் நித்தியானந்தாவும், அவரது கூட்டத்தினரும் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் உள்ள பவளக்குன்றில் மூவாயிரம் ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலத்தையும், வன நிலத்தையும் ஆக்கிரமிக்க முயற்சித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்து நிறுத்தியது.

இந்த நிலையில் சமீப காலமாக தோழர்கள் கருப்பு கருணா, வெண்புறா சரவணன் ஆகியோர் மீதும் அவர்களது குடும்பத்தினரை இணைத்தும் வக்கிரமான வீடியோக்களை வெளியிட்டு அட்டூழியம் செய்து வருகின்றனர். அந்த வீடியோக்களில் பேசுபவர்கள் 18 வயதுகூட நிரம்பாத இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இத்தகைய குழந்தைகள் பொதுவெளியில் காதால் கேட்க கூசுகிற வார்த்தைகளையும், சொல்லாடல்களையும் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. அந்தக் காணொளிகள் பாலியல் வக்கிரத்தோடு அமைந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சமீப காலமாக நித்தியானந்தா கும்பல் தியானத்துக்கு அழைத்து வந்த ஆண் பெண் குழந்தைகளைப் பெற்றோர்களுடன் அனுப்ப மறுப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. எனவே, காவல் துறை சம்பந்தப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018