மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

ஜிஎஸ்டி: வரி வசூல் அதிகரிப்பு!

ஜிஎஸ்டி: வரி வசூல் அதிகரிப்பு!

கடந்த டிசம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ரூ.86,703 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டு மாதங்களாகப் பின்னடைவைச் சந்தித்து வந்த வரி வசூல் டிசம்பரில் உயர்ந்துள்ளது.

2017 டிசம்பர் மாதத்துக்கான வரி வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டியாக (ஜனவரி 24 வரை) ரூ.86,703 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் ரூ.80,808 கோடியும், நவம்பர் மாதத்தில் ரூ.83,000 கோடியும் மட்டுமே வசூலிக்கப்பட்டிருந்தது. அதாவது இரண்டு மாதச் சரிவுக்குப் பிறகு டிசம்பரில் வரி வசூல் உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாத வரி வசூல் ரூ.92,150 கோடியாக இருந்தது.

ஜனவரி 24 வரையில் வரிச் செலுத்தும் ஒரு கோடிப் பேர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளதாகவும், இதில் இழப்பீடு பெறும் சுமார் 17.11 லட்சம் பேர் தங்களது வரி ரிட்டன்களை ஒவ்வொரு காலாண்டிலும் தவறாமல் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத்தில் சுமார் 56.30 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன்கள் செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான ஜிஎஸ்டிஆர் 4 ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜனவரி 18 ஆக இருந்தது. இதில் 9.25 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.421.35 கோடியாகும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018