வாட்ஸப் வடிவேலு


அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.
இப்படி சாதாரணமா சொல்லுவாங்கன்னா நினைக்கிறீங்க?
வாட்ஸ்அப் மெசேஜ்ல... கொடி கம்பத்தை வரைஞ்சு, அதுல கொடியைப் பறக்கவிட்டு, அதுலேருந்து பூ கொட்டவுட்டு, அப்புறம்தான் ‘குடியரசு தின நல்வாழ்த்துகள்’னு சொல்லுவாங்க.
எத்தனாவது குடியரசு தினம்னு சொல்ல மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கே தெரியாது. காலைல டிவில, பேப்பர்ல சொன்ன பார்த்த பிறகே எழுதுவாங்க.
பரவால்ல தப்பா சொல்லாம, சரியா சொல்லட்டும்.
டிவியில குடியரசு தின அணிவகுப்பைப் பார்த்துட்டு புதுசா ஒண்ணைக் கிளப்புவாங்க சிலர்.
இத்தனை படைகள்... கப்பற்படை, தரைப்படை, ஆயுதப்படை, ராணுவம்னு எல்லாத்தையும் பார்த்துட்டு 'அடேங்கப்பா'ன்னு வாய பொளந்து வாழ்த்தாம, இவர்களின் வாழ்வாதாரம் என்னாவது, இவ்வளவு போராடி நாட்டைக் காப்பாற்றி நல்லோர் கையில் ஒப்படைக்க வேண்டாமா?
அவர்கள் சம்பளம் என்ன? கேரள அரசு சம்பளம் என்ன? ரோடு எப்படி இருக்கு தெரியுமானு கொந்தளிக்கவே ஒரு குரூப் இருக்கு. ‘ஏன் வடிவேலு நீயே சொல்லி குடுப்ப போலருக்கே’னு என் மேல கோவப்படாதீங்க.
போன வருஷம் இதே கதைதான் நடந்துச்சு. அனுபவம்.
சரி, நாமளாச்சும் நல்ல விஷயம் நாலு ஃபாலோ பண்ணுவோம்.
பொறுமை பொறுமை பொறுமை
பொறுமையோ பொறுமை
பொறுமைக்கெல்லாம் பொறுமை
புரியலயா... இந்தப் கதையைப் படிங்க.
ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா?
ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது.
அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.
அனைவரையும் ஓர் அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்.
அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டன.
அப்போது அந்த நிறுவன மேலாளர் பேசினார்.
‘இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளன. உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்’ என்றார்.
ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.
நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாகப் பதில் எழுதினர்.
நேரம் முடிந்த பின் அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்.
விடைத்தாளை வாங்கும்போது ஒவ்வொருவரும், ‘நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள்... எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை’ என்றனர்.
அதில் இருவர் மட்டும் எந்தப் பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்... ‘விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள்.மற்றவர்கள் வீட்டுக்குச் செல்லலாம்’ என்றார்.
அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம், அனைவரும் ஒருசேர அந்த நிறுவன மேலாளரிடம் கேட்டனர்.
‘வினாக்களுக்குச் சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள்?’ என்றனர்.
(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா?)
அதற்கு அந்த மேலாளர் சொன்னார், ‘எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள்’ என்றார்.
படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர்.
அந்த பத்தாவது கேள்வி இதுதான்!
10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம். என்பதாகும்.
இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல.
நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இரண்டு நிமிடங்கள் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?
Yes...!
இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை ‘படி படி’ என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.