மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

கருணாநிதியை விட சிறந்தவர் தினகரன்

கருணாநிதியை விட சிறந்தவர் தினகரன்

‘திமுக தலைவர் கருணாநிதியை விட அதிக குறுக்கு வழிகள் தெரிந்தவர் தினகரன்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக அணிகள் இணைந்த பிறகு தினகரன் அதிமுகவிலிருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனைத் தோற்கடித்தார். அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்பட அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள தினகரன், இரட்டை இலையை மீட்க போராடுவதாகவும், இன்னும் சில மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் தெரிவித்துவருகிறார். தற்போது 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று (ஜனவரி 25) அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “புயல் வேகத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அரசு, அதிமுக அரசு. இன்றைக்கு எதற்கெடுத்தாலும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார். ஆனால், நாங்கள் அதைத் தொடர்ந்து முறியடித்து வருகிறோம்” என்று பேசினார்.

மேலும், “தற்போது எரிபொருள் விலை, வாகன உதிரிபாகங்களின் விலை உயர்ந்துவிட்டது. அதைக் கருத்தில்கொண்டுதான் பேருந்து கட்டண உயர்வு அறிவித்துள்ளோம். கட்டண உயர்வு, தவிர்க்க முடியாத கனத்த இதயத்தோடு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்துக் கழகம் இன்னும் இழப்பில்தான் செயல்படுகிறது. மற்ற துறைகளில் உள்ள நிதியை வழங்கியே இயக்கப்பட்டு வருகிறது” என்று கட்டண உயர்வு குறித்து மீண்டும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, “கோடிகளில் புரண்டவர்கள் கஜானாவை பற்றி பேசக் கூடாது. திமுக தலைவர் கருணாநிதியை விட அதிக குறுக்கு வழிகள் தெரிந்தவர் தினகரன். இன்றைக்கு கொல்லைப்புறமாக வந்து கட்சியைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால், ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது” என்றார். மேலும், “யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம், ஆனால், இன்னல் வரும்போது மக்களோடு இருந்தால்தான் நிலைக்க முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018