மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

கொல்கத்தா செல்லும் விஜய்

கொல்கத்தா செல்லும் விஜய்

விஜய்யின் அடுத்த படத்துக்கான வேலைகளில் வேகம் காட்டியிருக்கும் முருகதாஸ் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கொல்கத்தா செல்லவிருக்கிறார்.

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் இருவரும் மூன்றாவது இணைந்திருக்கின்றனர். விஜய்யின் 62ஆவது படமாக உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் நாள் படப்பிடிப்பை விஜய்யே கிளாப் போர்டு அடித்து தொடங்கிவைத்தார்.

சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள முட்டுக்காடு என்ற இடத்தில் படப்பிடிப்பைத் தொடங்கிய முருகதாஸ், அங்கு முடித்துவிட்டு அடுத்ததாக கொல்கத்தா செல்லவிருக்கிறார். கொல்கத்தாவில் உள்ள பூனேவில் கார் சேஸிங் சம்பந்தமான காட்சிகளை எடுக்க இருக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகள் உயிரோட்டமாக இருக்க வேண்டுமென அவர் அந்தந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கத்தியில் விவசாயப் பிரச்னைக்கு விஜய்யைக் குரல் கொடுக்க வைத்த முருகதாஸ், இதில் சமூக அநீதியை எதிர்த்துப் போராடும் இளைஞனாக காட்டவிருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஷோபி நடன இயக்குநராகவும், அனல் அரசு சண்டைக் கலைஞராகவும் பணிபுரிகின்றனர். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018