மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

ஹெல்த் ஹேமா: எதைச் சாப்பிடலாம், எதைத் தவிர்க்கலாம்?

ஹெல்த் ஹேமா: எதைச் சாப்பிடலாம், எதைத் தவிர்க்கலாம்?

1. தேனும் நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே, இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டும்.

2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடன் தயிர், மோர் சாப்பிடக் கூடாது.

3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக் கூடாது. அவ்வாறு உண்டால் ‘வெண் மேகம்’ போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.

6. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

7. உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

8. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

9. மூலநோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக் கூடாது.

10. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக் கூடாது.

11. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர் காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

12. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

13. பெண்கள் வீட்டுக்கு விலக்கான நாள்களில் கத்திரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக் கூடாது.

14. தோல் நோய் உள்ளவர்கள் கத்திரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

15. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக் கூடாது.

16. மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018