மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

மாணவர்களுக்கு ‘வேலைக்காரன்’!

மாணவர்களுக்கு ‘வேலைக்காரன்’!

‘வேலைக்காரன்’ திரைப்படத்தைப் பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்காகத் திரையரங்குகளில் இலவசமாகத் திரையிட இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் ஃபாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்கும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வேலைக்காரன் திரைப்படம் வெற்றியடைய உதவிய பொதுமக்களுக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த நேரத்தில் முக்கிய அறிவிப்பாக வேலைக்காரன் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட உணவுப் பிரச்னையின் ஆழத்தையும், முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்தையும், வலியுறுத்தலையும் ஏற்று வேலைக்காரன் திரைப்படத்தைப் பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு சில காட்சிகளை நீக்கிவிட்டு, இலவசமாகத் திரையரங்குகளில் பிப்ரவரி 1 முதல் 15 வரை திரையிட முடிவு செய்துள்ளோம். பள்ளி நிர்வாகத்தினர் எங்களைத் தொடர்பு கொண்டால் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் திரையரங்குகளில் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உதவியோடு ஆவன செய்ய தயாராக உள்ளோம்” என்று தெரிவித்திருப்பதுடன் தொடர்பு கொள்வதற்கான தகவலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 ஜன 2018