மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

தமிழக அமைச்சர்களுக்கு ரஜினி, கமல் எவ்வளவோ மேல்!

தமிழக அமைச்சர்களுக்கு ரஜினி, கமல் எவ்வளவோ மேல்!

அமீர் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. முத்துகோபால் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, விவுரி குமார் இசையமைத்துள்ளார். ஜெயப்பிரகாஷ், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டிராபிக் ராமசாமி, சுப.உதயகுமாரன், வளர்மதி, கார்ட்டூனிஸ்ட் பாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமீர், “இன்றைய கால கட்டத்தில் நடிகர்கள் சமூகத்திற்கு தேவைப்படும் கதைகளில் நடிப்பார்களா என்றால் சத்தியமாக நடிக்க மாட்டார்கள். விஜய், அஜித் பெரிய இடத்துக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் சமூகம் சார்ந்த கதையில் நடிக்க விரும்ப மாட்டார்கள். ரூ.100 கோடி வியாபாரத்தை அவர்கள் எட்டிவிட்டார்கள். வளரும் நடிகர்களும் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, அவர்களும் வியாபாரத்தை நோக்கிச் சென்று விடுகின்றனர். விஜய், அஜித் சமூக அக்கறை உள்ள கதைகளில் நடித்தால் நாம் எல்லாம் நடிக்க வேண்டியதோ, இங்கு வந்து பேச வேண்டிய தேவையோ இல்லை. இந்த விழாவை நான் ஆர்யா, ஜெயம்ரவி போன்ற நடிகர்களை வைத்து நடத்தியிருக்க முடியும். ஆனால், சினிமாவில் வருபவர்கள் எல்லோரும் நிஜ ஹீரோக்கள் கிடையாது. நிஜ ஹீரோக்களை வைத்து விழா நடத்த வேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் இவர்களை இங்கு அழைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துவிட்டு, மேடையிலிருந்தவர்களைப்பற்றி தனித்தனியே பேசத் தொடங்கினார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 26 ஜன 2018