ஆம்புலன்ஸ் வசதியில்லாததால், நோயாளிகள் அவதி!


திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வசதியில்லாததால் நோயாளிகள் பெரிதும் அவதியுற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வருகிறார்கள்.
இந்த நிலையில் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால், இங்குவரும் நோயாளிகளை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.