மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

துவரம்பருப்பு கொள்முதல் பணி தொடக்கம்!

துவரம்பருப்பு கொள்முதல் பணி தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் இலக்கு நிர்ணயித்துள்ள 4.46 லட்சம் டன் அளவிலான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான பணி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இணையம் வழியாக விவசாயிகள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நஃபெட் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும் கொள்முதல் பணி தாமதமாகிறது. அதிக ஈரப்பதம் மற்றும் தரத்தில் குறைவு போன்ற காரணங்களாலும் துவரம்பருப்பு கொள்முதல் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் தங்களது விளைபொருளைக் கொள்முதல் செய்யக் கோரிப் பதிவுசெய்துள்ளனர். நஃபெட் நிறுவனம் துவரம்பருப்பு கொள்முதல் பணிக்காக 150 மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில வேளாண் மற்றும் விலைகள் ஆணையத் தலைவர் பாஷா படேல் கூறுகையில், “துவரம்பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.5,450 ஆக இருக்கும் நிலையில் அதன் சந்தை விலை விலை ரூ.4,200 முதல் ரூ.4,400 வரை இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் சந்தை விலைக்கும் இடையேயான வேறுபாடு ரூ.1,000 ஆக இருப்பதால் விவசாயிகள் துவரம்பருப்பு கொள்முதலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்னும் சில நாள்களில் ஈரப்பதம் குறைந்ததும் கொள்முதல் பணி தொடரும். கடந்த பருவ ஆண்டில் 7.7 லட்சம் டன் அளவிலான துவரம்பருப்பு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் அந்த அளவுக்குக் கொள்முதல் செய்யப்பட வாய்ப்பில்லை” என்றார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 26 ஜன 2018