மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சசிகலாவிடம் சிறையில் விசாரணை!

சசிகலாவிடம் சிறையில் விசாரணை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிடம், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் நேரில் விசாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததாகத் தெரிவித்தது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம். இதன்பிறகு, அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, இதுபற்றி விசாரிப்பதற்காக கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் பலருக்கும் சம்மன் அனுப்பி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? அப்போது அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிய, இன்று (ஜனவரி 25) விசாரணை ஆணையத்துக்கு அரசு மருத்துவர் பாலாஜி இரண்டாவது முறையாக வரவழைக்கப்பட்டார். அவர் தனது பதில்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். தேவைப்பட்டால், மீண்டும் ஒருமுறை ஆணையத்தின் முன்பு ஆஜர் ஆகத் தயார் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்தில் தங்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர் பற்றிய விவரங்களை அளிக்குமாறு விசாரணை ஆணையத்திடம் ஏற்கனவே கேட்டுள்ளது சசிகலா தரப்பு. அதோடு, அவர்களை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி கேட்டுள்ளது. இதுகுறித்துப் பேச, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அப்போது, சசிகலாவிடம் சிறையில் நேரடியாக விசாரணை செய்வது குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வரும் 30ஆம் தேதிக்குள் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை ஆணையத்தில் சசிகலாவை ஆஜர்படுத்துவதில் சிக்கல் உள்ளதாகக் கருதப்படும் நிலையில், நீதிபதி ஆறுமுகசாமியே நேரடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. மவுன விரதம் இருப்பதாக சசிகலா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட பின்பு, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018