மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சுற்றுச்சூழல் மாசு: பின்தங்கிய இந்தியா!

சுற்றுச்சூழல் மாசு: பின்தங்கிய இந்தியா!

சுற்றுச்சூழல் மாசால் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 177ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், ஏல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள் உலகப் பொருளாதார அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று, காடுகள் அழிப்பு, மீன் வளம், மீத்தேன், கரியமில வாயு வெளியேறுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு, விவசாயம், பல்லுயிர் அழிப்பு உள்பட 10 வகையான பிரச்சினைகள் குறித்து 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 177ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டு 141ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 36 இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆய்வில், சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரான்ஸ், டென்மார்க், மால்ட்டா, சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. நியூசிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களில் ஐரோப்பா கண்டத்தைச் சேராத நாடுகளாக உள்ளன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018