மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சீடன் இல்லைன்னாலும் சிடி இருக்கும் -அப்டேட் குமாரு

சீடன் இல்லைன்னாலும் சிடி இருக்கும் -அப்டேட் குமாரு

மீனவர்கள் நலனைக் காக்கும் ஒரே அரசுன்னு பக்கத்துல இருந்தவர் ஃபேஸ்புக் போஸ்ட் டைப் பண்ணிட்ருந்தார். என்னண்ணே மேட்டருன்னு கேட்டதும். ஆமா, எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவர்றதை தடுக்கணும்னு எங்க முதல்வர் பிரதமருக்கு கடிதம் போட்ருக்காரே பாத்தீங்களான்னாப்ல. அப்ப கைது செய்யுறதும், கொலை செய்யுறதும் உங்காளுக்கு பிரச்சினை இல்லை அப்படித்தானன்னேன். அது அப்படி இல்லைப்பா, கொஞ்சம் கொஞ்சமா நகந்து போவோம். திடுதிப்புன்னா பாயுறதுன்னு கேட்டதும் வந்துதே கோவம்... அட, யோவ் பர்ஸ்ட் நைட்டா நடந்துகிட்டு இருக்கு கொஞ்சம் கொஞ்சமா நகந்துபோக. நாங்க மீனவர் பக்கம் போனா, நீங்க பஸ் ஸ்டேண்ட் பக்கம் திரும்புறீங்க. நாங்க பஸ் பக்கம் திரும்புனா நீங்க மீனவர் பக்கம் போறீங்க. எதாவது ஒரு பக்கம் நில்லுங்கய்யான்னதுக்கு. என்ன தம்பி நீங்க, நாங்கன்னு பிரிச்சு பேசுறீங்கன்றார். நீர் தானே அமைச்சரே முதலில் ‘எங்க முதல்வர்’ன்னு ஸ்டார்ட் பண்ண. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சார்பாகவும், நன்மையும் செய்தால் எங்க முப்பாட்டன் முருகன் மாதிரி கோவிச்சிக்கிட்டு போய்டுவோம்னேன். என்னது முப்பாட்டன் முருகனா? அப்ப நீ அவனா?’ அப்படின்னு பயந்துட்டாப்ல. ச்சே ச்சே நாங்க நாகரிகமானவங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இவங்களோட போராடுனதுல பத்மாவதி டிக்கெட் புக் பண்ணதை மறந்துட்டேன். நான் போய் படம் பாத்துட்டு வர்றேன்.

Vinayaga Murugan

தமிழர்களின் முப்பாட்டன் முருகன் என்பது உண்மைன்னா குன்றத்துல குமரனுக்கு கொண்டாட்டம் பாட்டைத்தானே தமிழ்த்தாய் வாழ்த்தா வைக்கணும்?

Muthu Ram

சுவாமிகள்னா எத்தினி பேருடா எப்பா?

ஒருத்தர்தான்.

சி.பி.செந்தில்குமார்

padmavat (hindi) படத்துக்கு ஒரு டிக்கெட் குடுங்க

3டி வெர்சன் 145 ரூபா.சாதா ரூ 120 ரூ

U படமா? A படமா?

U தான்

அப்ப 3 டி வேணாம்.சாதா ஓகே

Kavi Arasu

இந்நேரம் கண்ணாத்தா உசுரோட இருந்திருந்தா, காமகேடிகளோட பழைய வென்ஜென்ஸ மனசுல வச்சுகிட்டு விஜயேந்திரன வெளுத்து விட்டுருக்கும்ல

@Kozhiyaar

சில உறவுகள் பட்டாம்பூச்சி போலவே!

நல்லா இருக்குன்னு பிடிச்சி நசுக்கிட கூடாது!!

பறக்க விட்டு தான் ரசிக்கணும்!!!

Ezhirko Pamaran Shanmugasundaram

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது

எந்திரிக்கக் கூடாதுன்னு சொல்ல வரல....

எந்திரிக்காதவங்க முன்னாடி

அதைப் போடாதீங்கன்னுதான்

சொல்ல வர்றேன்.

காட்டுப்பயல்

அன்பே வான்னு சுத்திகிட்டு இருந்தவரை காலம் நாளை நமதேன்னு சொல்ல வச்சுருச்சு

@manipmp

சட்டம் படித்தவர்கள் "லா"வகமாய்

பேசுகின்றனர்

சூர்ய தேவன்

சீடர்கள் இல்லாத சாமியார்கள் கூட இருக்கிறார்கள்.

சீடிகள் இல்லாத சாமியார்கள் யாரும் இல்லை.

Mano Red

கமல் பேச்சு இரண்டு வகை

1. புரியாது

2. புரிஞ்சிக்கக் கூடாது

Jeeva Karikalan

இரவு பத்தரை மணிக்கு திருட்டுப்பயலே படம் பார்க்கச்செல்லும் போது தேசிய கீதத்திற்கு நெஞ்சில் கைவைத்து தன் நாட்டினை பெருமையாக நினைத்துக்கொள்ளும் சகமனிதனோடு எனக்கு எந்த பூசலும் இல்லை. அவனுக்கு தேசிய கீதம் ஒளிபரப்பும் முன் காட்டப்படும் CENSOR CERTIFICATEல் தேசியகீதம் மொழி இந்தி என்று இருப்பதை அவன் முழுமையாக நம்பத்தொடங்கியிருப்பான்.

அவன் குழந்தைக்கும் சொல்லிக்கொடுப்பான்.

Karthick Papilio Yehoshuah Muhammed

எல்லா இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட கூடாது என்பதே என் கருத்து - நடிகர் கமல்ஹாசன்

ஆன்மீக அரசியல் பண்ற ரஜினியை யே வெட்க பட வச்சுருவாரு தலைவரு

@saravananucfc

ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைவுனு சொல்றது விபரீதமாக செல்பி எடுத்து சாவுறவங்களுக்கு தான் சரியாக பொருந்துகிறது.

@vishnut87

தமிழ்நாட்ல முதல்ல தியானத்த தடை பண்ணனும்... ப்ரச்சனைன்னு வந்தா அத வெச்சே ஊர ஏமாத்துறாங்க...

@senthilcp

குடும்பத்தில் ஒருவர் வரி செலுத்தினாலும் ரேஷன் கிடையாது- தமிழகஅரசு.

நேர்மையா வரி கட்றவனையும் வரி ஏய்ப்புல ஈடுபடத்தூண்டுவாங்க"போல

@naatupurathan

ரஜினிக்கு, தன்னை காவி என அடையாளப்படுத்தி விடுவார்களோ என்று பயம்.,

கமலுக்கு, தன்னை கருப்பு என அடையாளப்படுத்தி விடுவார்களோ என்று பயம்!

@vishnut87

பசுமை நாடுகளில் இந்தியாவுக்கு 177 வது இடம். மொத்த நாடுகள் 180

அணு உலை மீத்தேன் நியூட்ரினோ க்கு போன்ற பசுமை திட்டங்களுக்கு சொம்பு அடிப்பதில் இந்திய முதல் இடம்

@amuduarattai

நன்றாக சாப்பிட்டால், தொப்பை வருது. நன்றாக சாப்பிடாவிட்டால், அல்சர் வருது.

@senthilcp

பாலிவுட் ஹீரோ கூட ராமராஜன் மாதிரி கண்ணுக்கு மை எல்லாம் விட்டிருக்காப்டி Padmavat

@drkvm

அன்று " இரட்டை குவளை "

இன்று " இரட்டை மேடை "

@ashoker

ஆண்டாளும் தமிழ்த்தாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும்.

@idumbaikarthi

ஊழல் நடக்கும்போது மக்கள் தியானத்தில்தானே இருந்தார்கள் என்கிறார் கமலஹாசன்.

அதுசரி.! வைரமுத்து விவகாரத்தில் நீங்கள் தியானத்தில் இருந்தது ஏன்?

@amuduarattai

தாய் வீட்டிற்கு "பெண்களின் புத்துணர்ச்சி முகாம்" என்று பெயர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018