மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

போக்குவரத்து நிர்வாகம்: திமுக குழு அமைப்பு!

போக்குவரத்து நிர்வாகம்: திமுக குழு அமைப்பு!

போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பேருந்துகளின் கட்டணம் கடந்த 19ஆம் தேதி திடீரென உயர்த்தப்பட்டது. அரசுக்கு பணம் செலுத்தி வழித்தடங்கள் பெறுவதால் தனியார் பேருந்துகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட மறுநாளே அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினரும் போராட்டம் அறிவித்தும், போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைமை கழகம் இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ள அறிவிப்பில், " எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பிரச்சனைகளை முழுமையாக ஆராய்ந்து, பேருந்துக் கட்டணத்தை மனம்போன போக்கில் ஏற்றாமலும், தொழிலாளர்களின் உரிமைகளை மதித்துப் போற்றிடும் வகையிலும் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை சீரமைத்துச் செம்மைப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்க ஒரு குழுவினை அமைத்து அறிக்கை கோருமாறு திமுக தலைமை கழகத்திற்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன், எம்.எல்.ஏ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 25 ஜன 2018