மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

‘விசிறி’ பாடல் உருவான விதம் : தாமரை

‘விசிறி’ பாடல் உருவான விதம் : தாமரை

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்ற விசிறி பாடல் உருவான விதம் குறித்தும், அப்பாடலுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும் விவரித்துள்ளார் பாடலாசிரியர் தாமரை.

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் ஜோடி நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தன்னுடைய முந்தைய படங்களில் ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரோடு பணிபுரிந்த கௌதம் மேனன் இந்தப் படத்தில் கிடாரி படத்தின் மூலம் இசையமைப்பாளராக கவனம் பெற்ற தர்புகா சிவாவோடு கூட்டணி அமைத்தார். ஆனால் தனது முதல் படத்தில் பாடல் எழுதிய பாடலாசிரியர் தாமரையின் வரிகளைத் தவிர்க்கவில்லை. அதனால் இந்தப் படத்திற்கும் தாமரையே அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.

தாமரை- தர்புகா சிவா கூட்டணியில் வெளியான மறுவார்த்தை பேசாதே, நான் பிழைப்பேனோ ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையேயும், காதலர்களிடையேயும் அதிகமாய் முணுமுணுக்கப்பட்டன. இதனையடுத்து இப்படத்தின் மற்றொரு பாடலான விசிறி பாடல் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில் அந்தப் பாடல் உருவான விதம் குறித்தும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் தாமரை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “‘விசிறி’, எனை நோக்கி பாயும் தோட்டா படப்பாடல், வெளியிட்டு 25 நாட்களில் 40 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பாடல் முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது. மிகச் சவாலான பாடலாக இருந்தது. இதனை வெற்றிபெறச்செய்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவுலகில் பெண் பாடலாசிரியர்கள் நிலைத்து நின்று வெற்றி காண்பது மிகவும் சவாலான காரியம். ஆனால் தொடர்ந்து பல படங்களில் பாடல்கள் எழுதி தன்னை நிலைத்த பாடலாசிரியராக தக்கவைத்துக்கொண்டுவருகிறார் தாமரை.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018