உலகமே உங்களுக்கு ஓட்டு போட்டதா?


600 கோடி பேர் தங்களுக்கு வாக்களித்து தேர்ந்தேடுத்ததாக சுவிட்சர்லாந்தில் பிரதமர் மோடி கூறியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார மாநாடு கடந்த 23ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது முழு உரையையும் இந்தியிலேயே ஆற்றினார். அதில், "2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 30ஆண்டுகளுக்குப் பிறகு 600கோடி மக்கள் (6 பில்லியன்) பாஜகவுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் இடுகையிடப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரத்தில் அப்பதிவு நீக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் கணக்கெடுப்புப்படி 2014 பொதுத் தேர்தலில் இந்தியாவில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எண்ணிக்கை 81.4 கோடி பேர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.