மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

தேசிய மருத்துவ ஆணையம்: மருத்துவர்கள் போராட்டம்!

தேசிய மருத்துவ ஆணையம்: மருத்துவர்கள் போராட்டம்!

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிராக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டால் அது மருத்துவர்களையும், மக்களையும் நேரடியாகப் பாதிக்கும் எனக் கூறி நாடு முழுவதும் மருத்துவர்கள் ஜனவரி 2ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நாடு முழுவதும் எழுந்த மருத்துவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறுத்திவைக்கப்பட்டு, அதை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 25) ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் பங்கேற்று மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணிக்குச் சென்றனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018