மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

நீட்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்சி பதில் மனு!

நீட்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்சி பதில் மனு!

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ இன்று (ஜனவரி 25) தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018-19ம் கல்வியாண்டிற்கான 'நீட்' தேர்வு வருகிற மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

2017இல் நடைபெற்ற நீட் தேர்வில் மாநிலங்கள் வாரியாக வினாத்தாள்கள் வழங்கப்பட்டன என்றும், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வினாத்தாள் மிகக் கடினமாக இருந்தது எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2017 டிசம்பர் 11ஆம் தேதி, இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் மோகன் சாந்தநாகுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ, அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின் போது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படும் என்றும், அனைத்து வினாத்தாள்களும் ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள், “சிபிஎஸ்இயின் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. நீட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்கில், சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பதில்மனுவை அளித்துள்ளது. அதில், “தமிழ், மராத்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படும். நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும்” எனத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுத, பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் என சிபிஎஸ்இ கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றாலும், பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 50% மதிப்பெண் பெற வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களில் பொது பிரிவினர், இயற்பியல், வேதியியல், உயிரியலில், 50 %மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். மற்ற பிரிவினர், 45% மதிப்பெண் பெற வேண்டும். அவர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என சிபிஎஸ்இ விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 25 ஜன 2018