மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

விஜயேந்திரருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விஜயேந்திரருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டுமென காஞ்சிபுரம் சங்கர மடத்தை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தந்தை ஹரிகரன் எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்ற நிலையில் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. ஆனால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றார். இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜயேந்திரருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால்தான் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்கவில்லை என காஞ்சி சங்கரமடம் விளக்கமளித்துள்ளது. ஆனால் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்கும் வரை தொடர்ந்தும் போராடுவோம் என்று பல்வேறு அமைப்புகளும் கூறியுள்ளன.

விஜயேந்திரருக்கு எதிராக பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராடி வருகின்றன. திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி தபசி குமரன் தலைமையில் விசிக, மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் சங்கரமடத்தை இன்று (ஜனவரி 25) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 25 ஜன 2018