மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

கிராமங்களைக் குறி வைக்கும் கமல்

கிராமங்களைக் குறி வைக்கும் கமல்

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், கிராமங்களின் முன்னேற்றத்தைப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கமல் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ராமேஸ்வரத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அரசியல் பயணத்துக்கு ’நாளை நமதே’ எனப் பெயரிட்டுள்ளதாகவும் கமல் இப்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த விகடனில் அவர் எழுதிவரும் கட்டுரையில், “மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21ஆம் தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத் திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இதுதான். அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “நாங்கள் என்ன செய்ய விழைகிறோம் என்பதற்கு முன்னுதாரணமாக, எங்கள் பானையில் எவ்வகைச் சோறு இருக்கிறது என்பதைப் பதம்பார்ப்பதற்கு ஏதுவாக முதல் கட்டமாகச் சில கிராமங்களைத் தத்தெடுக்கவிருக்கிறோம். ஒரு சோறு பதம்போல இது நாங்கள் செய்து காட்டும் எங்களுடைய செயல்திறனுக்கான அடையாளத் திட்டம்.

இது என் நம்பிக்கை மட்டுமன்று, எங்களுள் விதைக்கப்பட்ட நம்பிக்கை; இந்தியாவின் பலம் கிராமங்களில்தான் இருக்கிறது என்று காந்தியார் விதைத்தது. நகரத்தை நோக்கிப் புலம்பெயர்பவர்கள் எல்லாம் தேவைக்காகத்தான் நகர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அந்தத் தேவைகள் அவர்களைச் சென்றடையும் பட்சத்தில், அவர்கள் நகரம் நோக்கி நகர மாட்டார்கள். அப்படிப்பட்ட முன்மாதிரி கிராமங்களை நிஜமாகவே உருவாக்கிக் காட்டுவதற்கான முனைப்புதான் இது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018