மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

தடைகளை மீறி வெளியான பத்மாவத்!

தடைகளை மீறி வெளியான பத்மாவத்!

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 'பத்மாவத்' திரைப்படம் இன்று (ஜனவரி 25) வெளியாகியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் படமான பத்மாவத்துக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு நிலவி வந்தது. இந்தப் படத்தில் ராஜபுத்திர சமூகத்தினர் குறித்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அந்தச் சமூகத்தினர் படத்தைத் திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். மறு தணிக்கை செய்து படக்குழு படத்தை வெளியிட முடிவு செய்தது. ஆனால் மீண்டும் சர்ச்சையை உருவாக்கிப் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்துக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்திருந்தன. அதனால் படக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றம், தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தினைத் தடை செய்யக் கூடாது எனக் கூறி தடையை நீக்கியது. இதன் அடிப்படையில் பத்மாவத் திரைப்படம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் தமிழில் மொழிபெயர்த்து 3டி முறையில் பத்மாவத் வெளியாகியிருக்கிறது.

ஆனால் வடமாநிலங்களில் ஒருசில பகுதிகளில் ராஜபுத்திர வம்சத்தினர் ரயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு பாஜக ஆளும் மாநிலங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால் படத்தைத் திரையிடப்போவதில்லை என்று மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளை அடித்து நொறுக்கியும் வாகனங்களுக்குத் தீவைத்தும் குர்காவ்ன் உள்ளிட்ட இடங்களில் கர்ணி சேனா அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் ரசிகர்கள் படத்தைப் பார்க்க அச்சம் கொண்டுள்ளனர். மேலும் சிறப்புக் காட்சிக்குக் கூடக் குறைந்த ரசிகர்களே வருகை தந்தனர்.

இந்த நிலையில் பத்மாவத் திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனின் மூக்கை அறுத்து எடுத்துவருபவர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக வழங்கப்படும் என கான்பூர் ஷத்திரிய மகாசபா என்ற அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிஎன்என் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த அந்த அமைப்பின் தலைவர் கஜேந்திர சிங் ரஜாவத், “தீபிகா படுகோனின் மூக்கை அறுத்து வருபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதற்காக கான்பூர்வாசிகளிடம் கோடிக்கணக்கில் பணம் திரட்டப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 25 ஜன 2018