பாதுகாப்பாக இருக்கும் மக்களின் பணம்!


இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணம் அனைத்தும் எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் என்று அருண் ஜேட்லி மீண்டும் ஒருமுறை மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் வங்கித் துறையை மீட்டெடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாகச் சமீபத்தில் ரூ.2.11 கோடி மூலதனத்தை வங்கித் துறையின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் தற்போது இந்த மூலதனத்தைக் கொண்டு வங்கித் துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான பணியில் இறங்கியுள்ள நிதியமைச்சகம் அதற்கான செயல்திட்டத்தை வடிவமைத்து வருகிறது. அதற்கான வங்கி திவால் சட்டத்தில் மக்களின் பணம் வங்கிகளால் பயன்படுத்தப்படும் என்றும், அதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் பரவிய செய்திகளை மறுத்த மத்திய அரசு, மக்களின் பணம் பாதுகாக்கப்படும் என்று ஏற்கெனவே உறுதியளித்தது.