மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

ஜெ. செயலாளர்களுக்கு சம்மன்!

ஜெ. செயலாளர்களுக்கு சம்மன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது செயலாளர்களாக இருந்த வெங்கட்ராமன் உள்ளிட்டோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதனை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் கடந்த நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்திவருகிறது. ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணையில் ஜெ அண்ணன் வாரிசுகள் தீபா, தீபக், முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கிருஷ்ணப் பிரியா, மருத்துவர் சிவக்குமார், ஜெ உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

அப்பல்லோ நிர்வாகம் சார்பில் இரண்டு சூட்கேஸ்கள் நிறைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்ய மருத்துவக் குழு வேண்டும் என்று விசாரணை ஆணையம் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார். இன்று விசாரணை ஆணையத்தில் முன்பு மருத்துவர் பாலாஜி மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பல்வேறு தரப்பினரையும் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டு வரும் நிலையில், ஜெயலலிதாவின் செயலாளர்களாக இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராமன் வரும் 30ஆம் தேதியும், இரண்டாம் நிலை செயலாளராக விஜயகுமார் 31ஆம் தேதியும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மற்றும் செயலாளர்களாக இருந்த ராமலிங்கம் ஐஏஎஸ், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 25 ஜன 2018