மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக போராட்டம்!

ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக போராட்டம்!

தமிழகத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, தேமுதிக சார்பில் வரும் 29ஆம் தேதியன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் தேதி இரவு, அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தது தமிழக அரசு. எதிர்பாராத இந்த அறிவிப்பினால், கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கட்டண உயர்வைக் கைவிடக்கோரி தமிழகத்திலுள்ள எதிர்கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. முதல் நாளில் இருந்தே, பொதுமக்களும் மாணவர்களும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்

இந்த நிலையில், வரும் 29ஆம் தேதியன்று பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தலைமைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது

“பேருந்து கட்டண உயர்வுக்குக் காரணமான தமிழக அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் வருகிற 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்குகிறார். இதேபோல பிற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு முக்கிய நிர்வாகிகள் தலைமை தாங்குகின்றனர்” என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018