மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

நிமிர்: திரையரங்குகளில் நீடிக்குமா?

நிமிர்: திரையரங்குகளில் நீடிக்குமா?

இராமானுஜம்

பணபலம், அதிகார பலத்துடன் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் உதயநிதி ஸ்டாலின்.

கதாநாயகன் ஆசையில் 2012ல் இவர் நடித்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. சந்தானம், ஹன்சிகா, இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவான இந்த காமெடி படம் வெற்றி பெற்றது.

தொடர்ந்து கதிர்வேலன் காதல் (2014), நண்பேன்டா (2015), கெத்து, மனிதன் (2016), சரவணன் இருக்க பயமேன் (2017) ஆகிய படங்கள் இவர் நாயகனாக நடித்து வெளியான படங்கள். இவற்றில் எந்த படமும் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்புட்டு அடிச்சாலும் தாங்குறான்டா என வடிவேல் காமெடி மாதிரி, தான் நடிக்கும் படங்கள் தொடர் தோல்வி அடைந்து வந்தாலும் விக்கிரமாதித்தன் கதை போன்று விடா முயற்சியுடன் நாயகனாக நடிப்பதை கைவிட உதயநிதி ஸ்டாலின் தயாராக இல்லை.

பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம் "நிமிர்" பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன், சமுத்திரகனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜ், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சென்ராயன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள இப்படம் நாளை (ஜனவரி 26) ரிலீஸ் ஆகிறது.

அதே நாளில் அனுஷ்கா நடித்துள்ள பாகமதி, தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவத், விமல் நடித்துள்ள மன்னர் வகையறா படங்களும் ரீலீஸ் ஆகின்றன. இக்கடுமையான போட்டியில் நிமிர் கல்லா கட்டுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 25 ஜன 2018