மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

ஹெல்த் ஹேமா: முகுதுவலிக்கு முத்தான வைத்தியம்!

ஹெல்த் ஹேமா: முகுதுவலிக்கு முத்தான வைத்தியம்!

விளக்கெண்ணெயைச் சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

பூண்டு 5 பற்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணெயில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில் பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

புளிச் சாற்றெடுத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

சூடான நல்லெண்ணெய் + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி கால் தேக்கரண்டி – இவற்றை அரை கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.

வெண் நொச்சி மூலிகை, இடுப்புப் பிடிப்பைக் குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வீதம் எடுத்துக் கொள்ளவும்.

ஆயுர்வேத அனுபவம்

முதுகுவலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனைத் தருகின்றன.

முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.

மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.

ஒருநாள் எண்ணெயை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018