மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

என் போதாமைகளே எனது எல்லை: மாதவன்

என் போதாமைகளே எனது எல்லை: மாதவன்

தமிழில் மட்டுமல்ல இந்தித் திரையுலகிலும் தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டவர் மாதவன். கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் தனது நடிப்புத் திறமைக்குச் சவாலாக உள்ள முக்கியமான வேடங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவர் நடித்துள்ள ப்ரீத் (Breathe) வெப் சீரிஸ் நாளை (ஜனவரி 26) வெளியாகவுள்ளது.

திரில்லர் தொடரான இதில் டேனி மஸகார்னஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அனுஜ் சச்தேவ், சப்னா பப்பி உள்ளிட்ட சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதன் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த வெப் சீரிஸ் உருவாகிறது.

“எனது ரசிகர்களை மனதில் வைத்தே நான் ஒவ்வொரு படங்களிலும் ஒப்பந்தமாகிறேன். என்னால் வருடத்திற்கு ஆறு படங்களில் எளிதில் நடிக்க முடியும். இங்கு வாய்ப்புகளுக்குக் குறைவில்லை. ஆனால் நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. என்னால் சிக்ஸ் பேக் வைத்து நடிக்க முடியாது. டைகர் ஷராப் மாதிரி பறக்க முடியாது. ஹிருத்திக் ரோஷன் போல் நடனமாட முடியாது. என் போதாமைகளே எனது எல்லை. அதில் சிறந்த முறையில் நடிப்பேன்” என மாதவன் டெக்கான் க்ரோனிக்கலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018