மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

தெலுங்கில் அறிமுகமாகும் ஷிவானி

தெலுங்கில் அறிமுகமாகும் ஷிவானி

இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த டாக்டர் ராஜசேகர் - நடிகை ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி, தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவிருந்த நிலையில் தற்போது தெலுங்கில் களமிறங்குகிறார்.

பிரபு சாலமோன் இயக்கும் கும்கி 2 படத்தில் நடிக்கவுள்ளதாக முதலில் ஒரு தகவல் வந்து பின் அது மறுக்கப்பட்டது. மருத்துவப் படிப்பு படித்துவரும் ஷிவானி இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘டூ ஸ்டேட்ஸ்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஆதிவ் சேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ரொமான்டிக் வகையைச் சேர்ந்த இப்படத்தை வெங்கட் ரெட்டி இயக்குகிறார். இந்தியில் ஆலியா பட் நடித்த வேடத்தில் ஷிவானி நடிக்கவுள்ளார்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற வெற்றிப் படங்களில் நடித்த ஜீவிதா,தனது மகளின் சினிமா அறிமுகம் குறித்து டெக்கான் க்ரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். “பல்வேறு மொழிகளில் இருந்து ஷிவானிக்கு வாய்ப்புகள் வந்தன. சரியான திரைக்கதையில் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகப் பொறுத்திருந்தோம். அப்போதுதான் டூ ஸ்டேட்ஸ் படத்தின் ரீமேக் வாய்ப்பு வந்தது. இது அவளுக்கான சரியான அறிமுகமாக இருக்கும் என நான் நம்பினேன். படக்குழு தெலுங்கு உரிமையை மட்டும் வாங்கியுள்ளனர். ஆதிவ் சேஷுடன் அறிமுகமாவதும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் திறமையான நடிகராகத் தன்னை நிரூபித்துள்ளார்” என்று ஜீவிதா தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 25 ஜன 2018