மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

விமல் மீது மோசடி புகார்!

விமல் மீது மோசடி புகார்!

மன்னர் வகையறா திரைப்படம் தொடர்பாக நடிகர் விமல் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் -ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், நாளை (ஜனவரி 26) வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்துள்ள விமல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலிகிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் “ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் படம் தயாரித்திருக்கிறேன்; ஆனால் பட வெளியீடு தொடர்பான விளம்பரத்தில் என் பெயர் இல்லை. ஏற்கனவே இந்தப் படத்தின் தயாரிப்புக்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் நான் செலவு செய்திருப்பதுடன் படம் வெளியானதும் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்ற ஒப்பந்தமும் போட்டுள்ளேன். ஆனால், தற்போது என்னை ஓரங்கட்டிவிட்டுப் படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. அது மட்டுமல்லாமல் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்” என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் தனக்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் மோசடி செய்யப் பார்ப்பதாகவும், தமக்குத் தர வேண்டிய பணத்தை வசூலித்துத் தருமாறும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக்கொண்ட காவல் துறை, இந்தப் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 25 ஜன 2018