மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

கர்நாடகாவில் பந்த்!

கர்நாடகாவில் பந்த்!

மகதாயி நதிநீர் பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தி, சில கன்னட அமைப்புகளின் சார்பில் இன்று (ஜனவரி 25) கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா என மூன்று மாநிலங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பாசனத்திற்கு நீர் வழங்கி வருகிறது அங்குள்ள மகதாயி நதி. இதன் நீரைப் பங்கிடுவதில் மூன்று மாநிலங்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. கோவாவில் ஆட்சி செய்துவரும் பாஜக கூட்டணி அரசு, கடந்த மாதம் கர்நாடக மாநிலத்துடன் மகதாயி நதிநீரை பங்கிட முடியாது என திட்டவட்டமாக அறிவித்தது.

கர்நாடக பாஜக தலைவர்கள் மகதாயி நதிநீர் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்று உறுதியளித்து வந்த நிலையில், கோவா மாநில அரசின் பேச்சு சர்ச்சையை உண்டாக்கியது. இதனையடுத்து, அம்மாநில பாஜக அலுவலகங்கள் முன்பு கர்நாடக விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில், கன்னட ஓகுட்டா என்ற பெயரில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஒருங்கிணைந்துள்ள கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதன்படி, மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழு அடைப்பு காரணமாக, பெங்களூரு நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பேருந்து போக்குவரத்து பெரிய அளவில் இல்லையென்றும், மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து நடைபெறுகிறதென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆட்டோ மற்றும் டாக்சிகள் பெருமளவில் இயக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

அதே வேளையில், பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. அம்மாநிலத்தின் சில பகுதிகளில் கன்னட ரக்ஷன வேதிகே கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 25 ஜன 2018