மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

நீட் தேர்வு முடிவு வெளியீடு!

நீட் தேர்வு முடிவு வெளியீடு!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பிலும் டிப்ளமோ மேற்படிப்பிலும் 153 மருத்துவக் கல்லூரிகளில் 35,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 8,000 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். அதன்படி, 2018 -19 கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவுத் தேர்வு, ஜனவரி 7ஆம் தேதி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 128 நகரங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவர்கள் 20,000 பேர் உட்பட நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான முடிவுகள் ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்படும் என தேசியத் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 25 ஜன 2018