மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

சிவகார்த்தி சம்மதிக்க வேண்டும்!

சிவகார்த்தி சம்மதிக்க வேண்டும்!

“சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்தால் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ வெளிவரும்” என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

‘போடா போடி’ மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் திறமையை வெளிப்படுத்தினார். சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் பிஹைண்ட் வுட்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

“சிவகார்த்திகேயனுடன் படம் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ‘நானும் ரெளடி தான்’ படம் இயக்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொன்னேன். ஆனால் அவர் ‘மான் கராத்தே’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்தார். அதன் பிறகு நானும் பிஸியாகிவிட்டேன். இப்போது இருவருக்கும் நேரம் கூடிவந்திருக்கிறது. கதையைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன். அதைக் கேட்டு சிவகார்த்திகேயன் ஓகே சொன்னால், அவர்கள் தரப்பிலிருந்தே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 25 ஜன 2018