மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 ஜன 2018

மோதும் சாம்பியன்ஸ்!

மோதும் சாம்பியன்ஸ்!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் இன்று (ஜனவரி 25) நடைபெறவிருக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று சீசனில் சென்னை அணி ஒருமுறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும் கோப்பையைக் கைப்பற்றி உள்ளன. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் இதற்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோதின. அதில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மீண்டும் மோத உள்ளதால் வெற்றி பெறப்போவது யார் என்ற சுவாரஸ்யம் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது.

இதுவரை கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்று போட்டியில் கொல்கத்தா அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே சென்னை அணிக்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். ஆனால் இனி விளையாடும் அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பினைப் பெறமுடியும் என்பதால் கொல்கத்தா அணி முழுத்திறனையும் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கும். எனவே இன்றைய போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 25 ஜன 2018