கண் கவரும் மோட்டோ மாடல்!


மோட்டோ நிறுவனம் அதன் புதிய மாடலான x5 குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்த மோட்டோ நிறுவனம் அதன் விற்பனையை இடையில் நிறுத்தம் செய்திருந்தது. அதன் பின்னர் மீண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனையை நடத்திவந்த மோட்டோ நிறுவனம் தற்போது லினோவா நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடல்களை வடிவமைத்து மீண்டும் ஸ்மார்ட் போன் சந்தையில் களம் காண உள்ளது. அதன்படி மோட்டோ X4 என்ற மாடலை ஹோம் பட்டன் இல்லாமல் வடிவமைத்து, வித்தியாசமான வடிவமைப்பில் வெளியிட்டு வெற்றி கண்டது.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது X5 என்ற புதிய மாடலையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 4GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் வசதி, 3,300mAh பேட்டரி சக்தி கொண்டு இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பயனர்களை கவரும் விதத்தில் பின்புறம் கண்ணாடி போன்று மின்னும் வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்புறம் 12Mp + 8Mp மற்றும் செல்ஃபிக்காக 16Mp + 8Mp என இரண்டு புறமும் டூயல் கேமரா வசதியுடன் இந்த மாடல் வெளிவரவுள்ளது.